caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 182

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:182

فَمَنْ خَافَ مِن مُّوصٍ جَنَفًا أَوْ إِثْمًا فَأَصْلَحَ بَيْنَهُمْ فَلَآ إِثْمَ عَلَيْهِ إِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவர் மரணசாசனம் கூறுபவரிடத்தில் அநீதி அல்லது தவறைப் பயந்து, அவர்களுக்கு மத்தியில் சீர்திருத்தத்தை செய்தாரோ அவர் மீது அறவே குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.
Tamil Translation - Omar Sharifஆக, எவர் மரண சாசனம் கூறுபவரிடத்தில் அநீதி அல்லது தவறைப் பயந்தாரோ; இன்னும், அவர்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்தாரோ (அவர் செய்ததில்) அவர் மீது அறவே குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi182. ஆனால், மரணசாசனம் கூறியவரி(ன் சாசனத்தி)ல் அநீதம் அல்லது தவறு இருப்பதை எவரேனும் பார்த்து பயந்து, அ(ந்த சாசனப் பொருளை அடையக்கூடிய)வர்களுக்கிடையே சமாதானம் செய்து அதை மாற்றிவிட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க கருணையாளன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70