caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 181

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:181

فَمَنۢ بَدَّلَهُۥ بَعْدَ مَا سَمِعَهُۥ فَإِنَّمَآ إِثْمُهُۥ عَلَى ٱلَّذِينَ يُبَدِّلُونَهُۥٓ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவர் அதைக் கேட்டதற்குப் பின்னர், அதை மாற்றுவாரோ அதன் பாவமெல்லாம் மாற்றுகிறவர்கள் மீதே (சாரும்). நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன்.
Tamil Translation - Omar Sharifஆக, எவர் (மரண சாசனம் கூறுபவரிடமிருந்து) அ(வரது மரண சாசனத்)தை செவியுற்றதற்குப் பின்னர், அதை மாற்றுவாரோ அதன் பாவமெல்லாம் மாற்றுகிறவர்கள் மீதே (சாரும்). நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi181. (மரண சாசனமாகிய) அதைக் கேட்டதற்குப் பின்னர், எவரேனும் அதை மாற்றி விட்டால் அதன் பாவமெல்லாம் மாற்றியவரின் மீதே (சாரும்). நிச்சயமாக அல்லாஹ் (மரணிப்பவர் கூறும் சாசனத்தை) நன்கு செவியுறுபவன், (அதை மாற்றும் பாவிகளின் செயலை) நன்கறிந்தவன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70