لَّا يَمْلِكُونَ ٱلشَّفَٰعَةَ إِلَّا مَنِ ٱتَّخَذَ عِندَ ٱلرَّحْمَٰنِ عَهْدًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் சிபாரிசுக்கு உரிமை பெறமாட்டார்கள். (எனினும்) ரஹ்மானிடம் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியவரைத் தவிர.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் (யாருக்கும்) சிபாரிசு செய்ய(வோ யாரிடமிருந்து சிபாரிசு பெறவோ) உரிமை பெறமாட்டார்கள். (எனினும்) ரஹ்மானிடம் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திய (நம்பிக்கையாளர்களான நல்ல)வர்களைத் தவிர.
Tamil Translation - Abdulhamid Baqawi87. ரஹ்மானிடம் அனுமதி பெற்றவர்களைத் தவிர எவரும் (எவருக்கும்) சிபாரிசு பேச உரிமை பெறமாட்டார்.