قُلْ مَن كَانَ فِى ٱلضَّلَٰلَةِ فَلْيَمْدُدْ لَهُ ٱلرَّحْمَٰنُ مَدًّا حَتَّىٰٓ إِذَا رَأَوْا۟ مَا يُوعَدُونَ إِمَّا ٱلْعَذَابَ وَإِمَّا ٱلسَّاعَةَ فَسَيَعْلَمُونَ مَنْ هُوَ شَرٌّ مَّكَانًا وَأَضْعَفُ جُندًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகூறுவீராக! (நம் இரு பிரிவினரில்) யார் வழிகேட்டில் இருக்கின்றாரோ அவருக்கு ரஹ்மான் (அதை) நீட்டிவிடட்டும். இறுதியாக அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை -ஒன்று வேதனையை அல்லது மறுமையை- அவர்கள் பார்த்தால் யார் தங்குமிடத்தால் மிகக் கெட்டவர், படையால் மிகப் பலவீனமானவர் என்பதை அறிவார்கள்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: (நம் இரு பிரிவினரில்) யார் வழிகேட்டில் இருக்கிறாரோ அவருக்கு ரஹ்மான் (அதை) நீட்டிவிடட்டும். இறுதியாக, அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை - ஒன்று தண்டனையை; அல்லது, மறுமை நாளை- அவர்கள் (கண்கூடாக) பார்த்தால் யார் தங்குமிடத்தால் மிகக் கெட்டவர், படையால் மிகப் பலவீனமானவர் என்பதை அறிவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi75. (நபியே!) கூறுவீராக: எவன் வழிகேட்டில் இருக்கிறானோ அவனுக்கு ஏற்பட்ட தண்டனையை அவன் கண்ணால் காணும் வரை ரஹ்மான் அவனுக்கு (இம்மையில்) தவணையளிக்கிறான். (அதை அவன் கண்டதன் பின்னரோ) அவனுக்கு வேதனை கிடைக்கும். அல்லது அவனுடைய காலம் முடிந்துவிடும். பின்னர், எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலவீனமானது என்பதைத் திட்டமாக அவர்கள் (மறுமையில்) அறிந்து கொள்வார்கள்.