caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Maryam அத்தியாயம், வசனம் 65

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 44 · 19:65

رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا فَٱعْبُدْهُ وَٱصْطَبِرْ لِعِبَٰدَتِهِۦ هَلْ تَعْلَمُ لَهُۥ سَمِيًّا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் வானங்கள், பூமி இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன். ஆகவே, அவனை வணங்குவீராக! அவனை வணங்குவதில் பொறுமையாக இருப்பீராக! அவனுக்கு ஒப்பானவரை நீர் அறிவீரா!
Tamil Translation - Omar Sharif(அவனே) வானங்கள், பூமி இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் ஆவான். ஆகவே, அவனை வணங்குவீராக! இன்னும், அவனை வணங்குவதில் உறுதியாக (நிரந்தரமாக) இருப்பீராக! அவனுக்கு ஒப்பான ஒருவரை நீர் அறிவீரா!
Tamil Translation - Abdulhamid Baqawi65. வானங்களையும், பூமியையும், இவற்றிற்கு மத்தியில் உள்ளவற்றையும் படைத்த இறைவன் அவனே! ஆதலால், அவன் ஒருவனையே வணங்குவீராக. அவனை வணங்குவதில் (உமக்கு ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக. அவனுடைய தன்மைக்கு ஒப்பான எவரையும் நீர் அறிவீரா? (இல்லையே).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70