فَلَمَّا ٱعْتَزَلَهُمْ وَمَا يَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ وَهَبْنَا لَهُۥٓ إِسْحَٰقَ وَيَعْقُوبَ وَكُلًّا جَعَلْنَا نَبِيًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் அவர்களையும் அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கியதையும் விட்டு விலகியபோது அவருக்கு (மகனாக) இஸ்ஹாக்கையும் (பேரனாக) யஅகூபையும் வழங்கினோம். (அவர்களில்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர் - அவர்களையும் அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கியதையும் விட்டு விலகியபோது அவருக்கு (மகனாக) இஸ்ஹாக்கையும் (பேரனாக) யஅகூபையும் வழங்கினோம். இன்னும், (அவர்களில்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi49. பின்னர் அவர் அவர்களை விட்டும் அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டார். அதன் பின்னர் இஸ்ஹாக்கையும், யஅகூபையும் அவருக்கு(ச் சந்ததிகளாக) நாம் வழங்கினோம். அவர்கள் ஒவ்வொருவரையும் நபியாகவும் ஆக்கினோம்.