وَأَعْتَزِلُكُمْ وَمَا تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ وَأَدْعُوا۟ رَبِّى عَسَىٰٓ أَلَّآ أَكُونَ بِدُعَآءِ رَبِّى شَقِيًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களையும் அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குகின்றவற்றையும் விட்டு நான் விலகி விடுகின்றேன். என் இறைவனிடம் (மட்டும்) நான் பிரார்த்திப்பேன். என் இறைவனிடம் (நான்) பிரார்த்திப்பதில் நான் நம்பிக்கை அற்றவனாக ஆகாமல் இருப்பேன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், உங்களையும் அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குகின்றவற்றையும் விட்டு நான் விலகி விடுகிறேன். இன்னும், என் இறைவனை நான் (கலப்பற்ற முறையில்) பிரார்த்திப்பேன். என் இறைவனிடம் (நான்) பிரார்த்திப்பதில் நான் துர்பாக்கியவானாக (-நம்பிக்கை அற்றவனாக, பிரார்த்தனை நிராகரிக்கப்பட்டவனாக) ஆகாமல் இருப்பேன்.
Tamil Translation - Abdulhamid Baqawi48. ‘‘உங்களை விட்டும் அல்லாஹ்வைத் தவிர்த்து நீங்கள் (தெய்வமென) அழைப்பவற்றை விட்டும் நான் விலகிக்கொள்கிறேன். என் இறைவனையே நான் (வணங்கி) பிரார்த்தித்துக் கொண்டிருப்பேன். என் இறைவனிடம் நான் செய்யும் பிரார்த்தனைகள் எனக்குத் தடுக்கப்படாதிருக்கும் என்று நான் நம்புகிறேன்'' (என்றும் கூறினார்.)