caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Maryam அத்தியாயம், வசனம் 12

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 44 · 19:12

يَٰيَحْيَىٰ خُذِ ٱلْكِتَٰبَ بِقُوَّةٍ وَءَاتَيْنَٰهُ ٱلْحُكْمَ صَبِيًّا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionயஹ்யாவே! வேதத்தை பலமாகப் பற்றிப் பிடிப்பீராக! (வேதத்தைப் புரிவதற்கு) ஞானத்தை (அவர்) சிறு குழந்தையாக இருக்கும்போதே அவருக்குக் கொடுத்தோம்.
Tamil Translation - Omar Sharif(ஆக, அவருக்கு யஹ்யா என்ற மகன் பிறந்தார். அவர் பேசுகின்ற வயதை அடைந்த போது நாம் அவரை நோக்கி கூறினோம்:) “யஹ்யாவே! (தவ்ராத்) வேதத்தை பலமாகப் பற்றிப் பிடிப்பீராக!” இன்னும், (வேதத்தைப் புரிவதற்கு) ஞானத்தை (அவர்) சிறு குழந்தையாக இருக்கும்போதே அவருக்குக் கொடுத்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi12. (நாம் கூறியவாறே ஜகரிய்யாவுக்கு யஹ்யா பிறந்த பின்னர் நாம் அவரை நோக்கி) ‘‘யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்வீராக'' என்று கூறி, நாம் அவருக்கு (அவருடைய) சிறு வயதிலேயே ஞானத்தையும் அளித்தோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70