فَخَرَجَ عَلَىٰ قَوْمِهِۦ مِنَ ٱلْمِحْرَابِ فَأَوْحَىٰٓ إِلَيْهِمْ أَن سَبِّحُوا۟ بُكْرَةً وَعَشِيًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் தனது மக்களுக்கு முன் தொழுமிடத்திலிருந்து வெளியேறி வந்தார். அவர்களை நோக்கி “காலையிலும் மாலையிலும் (அல்லாஹ்வை) துதியுங்கள்” என்று ஜாடை காண்பித்தார்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர் தனது மக்களுக்கு முன் தொழுமிடத்திலிருந்து வெளியேறி வந்தார். அவர்களை நோக்கி “காலையிலும் மாலையிலும் (அல்லாஹ்வை) துதியுங்கள்” என்று சைகை காண்பித்தார்.
Tamil Translation - Abdulhamid Baqawi11. பின்னர், அவர் (வழக்கப்படி மக்களுக்கு நல்லுபதேசம் செய்ய ஆலயத்தின் மிஹ்ராப்) மாடத்திலிருந்து வெளிப்பட்டுத் தன் மக்கள் முன் வந்தார். (எனினும், அவரால் வாய் திறந்து பேச முடியாமலாகி விட்டது.) ஆகவே, காலையிலும் மாலையிலும் (இறைவனைப்) புகழ்ந்து துதி செய்யுங்கள் என்று (தன் கையால்) அவர்களுக்கு ஜாடை காண்பித்தார்.