قَالَ رَبِّ ٱجْعَل لِّىٓ ءَايَةً قَالَ ءَايَتُكَ أَلَّا تُكَلِّمَ ٱلنَّاسَ ثَلَٰثَ لَيَالٍ سَوِيًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் கூறினார்: “என் இறைவா! எனக்கு ஓர் அத்தாட்சியை ஏற்படுத்து!” அவன் கூறினான்: “மூன்று இரவுகள் (நாட்கள்) நீர் சுகமாக இருக்க, மக்களிடம் பேசாமல் இருப்பதுதான் உமக்கு அத்தாட்சியாகும்.”
Tamil Translation - Omar Sharifஅவர் கூறினார்: “என் இறைவா! எனக்கு ஓர் அத்தாட்சியை ஏற்படுத்து!” அவன் கூறினான்: “நீர் (எவ்வித நோயுமின்றி) சுகமாக இருக்க, மூன்று இரவுகள் மக்களிடம் நீர் பேசாமல் இருப்பதுதான் உமக்கு அத்தாட்சியாகும்.”
Tamil Translation - Abdulhamid Baqawi10. அதற்கவர் ‘‘என் இறைவனே! (இதற்கு) எனக்கோர் அத்தாட்சி அளி'' என்று கேட்டார். (அதற்கு இறைவன்) ‘‘உமக்கு (நான் அளிக்கும்) அத்தாட்சியாவது நீர் (சுகமாக இருந்துகொண்டே) சரியாக மூன்று இரவுகளும் (பகல்களும்) மனிதர்களுடன் பேச முடியாமல் ஆகிவிடுவதுதான்'' என்று கூறினான்.