caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Kahf அத்தியாயம், வசனம் 98

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 69 · 18:98

قَالَ هَٰذَا رَحْمَةٌ مِّن رَّبِّى فَإِذَا جَآءَ وَعْدُ رَبِّى جَعَلَهُۥ دَكَّآءَ وَكَانَ وَعْدُ رَبِّى حَقًّا

Tamil Translation - Omar Sharif - Abridged Version“இது என் இறைவனிடமிருந்துள்ள அருளாகும். என் இறைவனின் (யுக முடிவு எனும்) வாக்கு வரும்போது இதைத் தூள் தூளாக்கிவிடுவான். என் இறைவனின் வாக்கு (முற்றிலும்) உண்மையாக இருக்கிறது!” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharifஅவர் கூறினார்: “இது என் இறைவனிடமிருந்து கிடைத்த அருளாகும். ஆக, என் இறைவனின் (யுக முடிவு எனும்) வாக்கு வரும்போது அவன் இதைத் தூள் தூளாக்கிவிடுவான். இன்னும், என் இறைவனின் வாக்கு (முற்றிலும் நிகழக்கூடிய) உண்மையாக இருக்கிறது!”
Tamil Translation - Abdulhamid Baqawi98. (இவ்வாறு தயாரான தடுப்பைக் கண்ட அவர்) ‘‘இது என் இறைவனுடைய அருள்தான். என் இறைவனின் வாக்குறுதி(யாகிய யுக முடிவு) வரும்போது, இதை(யும்) தூள் தூளாக்கிவிடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையாக இருக்கிறது!'' என்று கூறினார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70