وَتَرَكْنَا بَعْضَهُمْ يَوْمَئِذٍ يَمُوجُ فِى بَعْضٍ وَنُفِخَ فِى ٱلصُّورِ فَجَمَعْنَٰهُمْ جَمْعًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅந்நாளில் சிலர் சிலருடன் (ஜின்கள் மனிதர்களுடன்) கலந்துவிடும்படி விட்டுவிடுவோம். (இரண்டாவது முறையாக) சூரில் (எக்காளத்தில்) ஊதப்படும். ஆகவே, (உயிர் கொடுத்து) அவர்களை நிச்சயம் ஒன்று சேர்ப்போம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அந்நாளில் சிலர் சிலருடன் (-ஜின்கள் மனிதர்களுடன்) கலந்துவிடும்படி விட்டுவிடுவோம். (இரண்டாவது முறையாக) சூரில் (எக்காளத்தில்) ஊதப்படும். ஆகவே, (விசாரணைக்காக உயிர் கொடுத்து) அவர்களை நிச்சயமாக ஒன்று சேர்ப்போம்.
Tamil Translation - Abdulhamid Baqawi99. அந்நாள் வருவதற்குள் சிலர் சிலருடன் (கடல்) அலைகளைப் போல் மோதும்படி நாம் விட்டுவிடுவோம். (பின்னர்) சூர் (எக்காளம்) ஊதப்பட்(டு அனைவரும் மடிந்து விட்)டால் பின்னர் (உயிர் கொடுத்து) அவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து விடுவோம்.