وَيَسْـَٔلُونَكَ عَن ذِى ٱلْقَرْنَيْنِ قُلْ سَأَتْلُوا۟ عَلَيْكُم مِّنْهُ ذِكْرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) துல்கர்னைனைப் பற்றி (அவர்கள்) உம்மிடம் கேட்கின்றனர். “அவரைப் பற்றிய நல்லுபதேசத்தை உங்களுக்கு ஓதுவேன்” என்று கூறுவீராக.
Tamil Translation - Omar Sharif(நபியே!) மேலும், துல்கர்னைன் பற்றி (அவர்கள்) உம்மிடம் கேட்கிறார்கள். “அவரைப் பற்றிய நல்லுபதேசத்தை உங்களுக்கு நான் ஓதுவேன்” என்று கூறுவீராக.
Tamil Translation - Abdulhamid Baqawi83. (நபியே!) துல்கர்னைனைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ‘‘அவருடைய சரித்திரத்தில் (இருந்து) உங்களுக்கு (பயனளிக்கும்) அறிவுரையை ஓதிக் காண்பிக்கிறேன்'' என்று கூறுவீராக.