وَأَمَّا ٱلْجِدَارُ فَكَانَ لِغُلَٰمَيْنِ يَتِيمَيْنِ فِى ٱلْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُۥ كَنزٌ لَّهُمَا وَكَانَ أَبُوهُمَا صَٰلِحًا فَأَرَادَ رَبُّكَ أَن يَبْلُغَآ أَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنزَهُمَا رَحْمَةً مِّن رَّبِّكَ وَمَا فَعَلْتُهُۥ عَنْ أَمْرِى ذَٰلِكَ تَأْوِيلُ مَا لَمْ تَسْطِع عَّلَيْهِ صَبْرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, (அந்தச்) சுவரோ (அப்)பட்டிணத்திலுள்ள இரு அனாதைக் குழந்தைகளுக்குரியதாக இருந்தது. அதற்குக் கீழ் அவ்விருவருக்குரிய புதையல் ஒன்று இருக்கிறது. அவ்விருவரின் தந்தை (மிக) நல்லவராக இருந்தார். ஆகவே, அவ்விருவரும் தங்கள் வாலிபத்தை அடைந்து, தங்கள் புதையலை வெளியே எடுத்துக் கொள்வதற்கு உம் இறைவன் நாடினான். (எனவே, அதைச் செப்பனிட்டேன். இது,) உம் இறைவனின் அருளினால் (செய்யப்பட்டது). (மேற்படி நிகழ்ந்த) இவற்றை நான் என் இஷ்டப்படி செய்யவில்லை. நீர் பொறு(த்திரு)ப்பதற்கு இயலாதவற்றின் விளக்கம் இதுதான்”என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharifஆக, (அந்தச்) சுவரோ (அந்த) நகரத்திலுள்ள இரு அனாதைக் குழந்தைகளுக்குரியதாக இருந்தது. இன்னும், அதற்குக் கீழ் அவ்விருவருக்குரிய புதையல் ஒன்று இருக்கிறது. அவ்விருவரின் தந்தை (மிக) நல்லவராக இருந்தார். ஆகவே, அவ்விருவரும் தங்கள் வாலிபத்தை அடைந்து, தங்கள் புதையலை வெளியே எடுக்க வேண்டும் என்பதை உம் இறைவன் நாடினான். (எனவே, நான் அந்தச் சுவரைச் செப்பனிட்டேன். இது,) உம் இறைவனின் அருளினால் (செய்யப்பட்டது). (மேற்படி நிகழ்ந்த) இவற்றை நான் என் இஷ்டப்படி செய்யவில்லை. நீர் பொறுமையாக இருப்பதற்கு இயலாதவற்றின் விளக்கம் இதுதான்.
Tamil Translation - Abdulhamid Baqawi82. அந்தச் சுவரோ அப்பட்டிணத்திலுள்ள இரு அனாதைக் குழந்தைகளுக்குரியது. அதற்குக் கீழ் அவர்களுக்குச் சொந்தமான புதையல் ஒன்று இருக்கிறது. அவ்விருவரின் தந்தை மிக்க நல்ல மனிதராக இருந்தார். ஆகவே, உமது இறைவன் அவ்விருவரும் தங்கள் வாலிபத்தை அடைந்த பின்னர் தங்கள் புதையலை எடுத்துக் கொள்ளும்படிச் செய்ய நாடினான். (எனவே, அதுவரை அச்சுவர் விழுந்து விடாதிருக்கும்படி அதைச் செப்பனிட்டேன். இது) உமது இறைவனின் அருள்தான். (இம்மூன்றில்) எதையும் நான் என் இஷ்டப்படி செய்துவிடவில்லை. நீர் பொறுத்துக் கொள்ள முடியாமல் போன (என்) செய்கைகளின் விளக்கம் இதுதான்'' (என்று கூறி முடித்தார்).