وَرَبُّكَ ٱلْغَفُورُ ذُو ٱلرَّحْمَةِ لَوْ يُؤَاخِذُهُم بِمَا كَسَبُوا۟ لَعَجَّلَ لَهُمُ ٱلْعَذَابَ بَل لَّهُم مَّوْعِدٌ لَّن يَجِدُوا۟ مِن دُونِهِۦ مَوْئِلًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉம் இறைவன் மகா மன்னிப்பாளன், கருணையுடையவன். அவர்கள் செய்தவற்றுக்காக அவன் அவர்களை (தண்டனையைக் கொண்டு) பிடித்தால் வேதனையை அவர்களுக்கு தீவிரப்படுத்தியிருப்பான். மாறாக, அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஒரு நேரம் இருக்கிறது. அதிலிருந்து (தப்பிக்க) ஒதுங்குமிடத்தை (அவர்கள்) பெறவே மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், உம் இறைவன் மகா மன்னிப்பாளன், (நிறைவான) கருணையுடையவன் ஆவான். அவர்கள் செய்தவற்றுக்காக அவன் அவர்களை தண்டித்தால் தண்டனையை அவர்களுக்கு தீவிரப்படுத்தியிருப்பான். மாறாக, அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஒரு நேரம் இருக்கிறது. அதிலிருந்து (தப்பிக்க) ஒதுங்குமிடத்தை (அவர்கள்) அறவே பெற மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi58. ஆனால், (நபியே!) உமது இறைவன் மிக்க மன்னிப்பவனும், கருணையுடையவனும் ஆவான். அவர்கள் செய்யும் (தீய) செயலின் காரணமாக அவன் அவர்களை (உடனுக்குடன்) பிடிப்பதாக இருந்தால் இதுவரை அவர்களை வேதனை செய்தேயிருப்பான். எனினும், (அவர்களைத் தண்டிக்க) அவர்களுக்கு ஒரு தவணை உண்டு. அதற்குப் பின்னர் அவர்கள் தப்ப வழி காணமாட்டார்கள்.