caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Kahf அத்தியாயம், வசனம் 59

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 69 · 18:59

وَتِلْكَ ٱلْقُرَىٰٓ أَهْلَكْنَٰهُمْ لَمَّا ظَلَمُوا۟ وَجَعَلْنَا لِمَهْلِكِهِم مَّوْعِدًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅந்த ஊர்(வாசி)கள், அவர்கள் தீங்கிழைத்தபோது அவர்களை அழித்தோம். அவர்கள் அழிவதற்கு (வாக்களிக்கப்பட்ட) ஒரு தவணையை ஆக்கினோம்.
Tamil Translation - Omar Sharifஅந்த ஊர்(வாசி)கள், அவர்கள் தீங்கிழைத்தபோது அவர்களை அழித்தோம். இன்னும், அவர்களின் அழிவிற்காக வாக்களிக்கப்பட்ட ஒரு நேரத்தை நாம் ஆக்கினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi59. பாவம் செய்துகொண்டிருந்த இவ் ஊர்வாசிகள் அனைவரையும் நாம் அழித்து விட்டோம். எனினும், அவர்களை அழிப்பதற்கும் நாம் ஒரு தவணையை ஏற்படுத்தி இருந்தோம். (அத்தவணை வந்த பின்னரே நாம் அவர்களை அழித்தோம்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70