caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Israa அத்தியாயம், வசனம் 56

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 50 · 17:56

قُلِ ٱدْعُوا۟ ٱلَّذِينَ زَعَمْتُم مِّن دُونِهِۦ فَلَا يَمْلِكُونَ كَشْفَ ٱلضُّرِّ عَنكُمْ وَلَا تَحْوِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! அவனையன்றி (தெய்வங்கள் என) நீங்கள் கூறியவற்றை (உங்கள் துன்பத்தில் அவர்களிடம் உதவிகோரி) அழையுங்கள். அவை உங்களை விட்டுத் துன்பத்தை நீக்குவதற்கும் (அதை விட்டுத்) திருப்புவதற்கும் ஆற்றல் பெற மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக! அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என்று) கூறியவற்றை (உங்கள் துன்பத்தில் உங்களுக்கு உதவுவதற்கு) அழையுங்கள். ஆனால், அவை உங்களை விட்டும் துன்பத்தை நீக்குவதற்கும், (அதை வேறு ஒருவர் பக்கம்) திருப்புவதற்கும் ஆற்றல் பெற மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi56. (நபியே! இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ்வைத் தவிர்த்து (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களே அவற்றை நீங்கள் (உங்கள் சிரமங்களை நீக்க) அழையுங்கள். (அவ்வாறு அழைத்தால்) அவை உங்கள் சிரமத்தை நீக்கி வைக்கவோ அல்லது (அதைத்) தட்டிவிடவோ சக்திபெறாது (என்பதை அறிந்து கொள்வீர்கள்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70