caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Israa அத்தியாயம், வசனம் 55

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 50 · 17:55

وَرَبُّكَ أَعْلَمُ بِمَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَلَقَدْ فَضَّلْنَا بَعْضَ ٱلنَّبِيِّـۧنَ عَلَىٰ بَعْضٍ وَءَاتَيْنَا دَاوُۥدَ زَبُورًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானங்கள் இன்னும் பூமியில் உள்ளவர்களை உம் இறைவன் மிக அறிந்தவன். நபிமார்களில் சிலரை சிலர் மீது திட்டவட்டமாக மேன்மைப்படுத்தினோம், (நபி) தாவூதுக்கு ‘ஜபூரை’க் கொடுத்தோம்.
Tamil Translation - Omar Sharifவானங்களில், இன்னும் பூமியில் உள்ளவர்களை உம் இறைவன் மிக அறிந்தவன். நபிமார்களில் சிலரை சிலர் மீது திட்டவட்டமாக மேன்மைப்படுத்தினோம். இன்னும், (நபி) தாவூதுக்கு ‘ஸபூரை’க் கொடுத்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi55. வானங்களிலும் பூமியிலும் என்னென்ன இருக்கிறது என்பதை உம் இறைவன் நன்கறிவான். (நபியே! உமது இறைவனாகிய) நாம் நபிமார்களில் சிலரை சிலர்மீது மெய்யாகவே மேன்மையாக்கி வைத்து, தாவூது (நபி)க்கு ‘ஜபூர்' என்னும் வேதத்தைக் கொடுத்தோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70