caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Israa அத்தியாயம், வசனம் 57

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 50 · 17:57

أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَىٰ رَبِّهِمُ ٱلْوَسِيلَةَ أَيُّهُمْ أَقْرَبُ وَيَرْجُونَ رَحْمَتَهُۥ وَيَخَافُونَ عَذَابَهُۥٓ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُورًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(தூதர்கள், இறைநேசர்கள், இன்னும் வானவர்களில்) எவர்களை இவர்கள் பிரார்த்தனையில் அழைக்கின்றார்களோ அவர்கள் தங்கள் இறைவன் பக்கம் தங்களில் மிக நெருங்கியவராக யார் ஆகுவது என்று நன்மையை (அதிகம் செய்ய வழிகளை)த் தேடுகின்றனர்; அவனுடைய அருளை ஆதரவு வைக்கின்றனர்; அவனுடைய வேதனையைப் பயப்படுகின்றனர். நிச்சயமாக உம் இறைவனின் வேதனை பயப்படவேண்டியதாக இருக்கின்றது! (ஆகவே, அவர்களிடம் எப்படி இவர்கள் இரட்சிப்பைத் தேடமுடியும்)
Tamil Translation - Omar Sharif(தூதர்கள், வானவர்கள், இன்னும் இறைநேசர்களில்) எவர்களை இவர்கள் (தங்கள் தேவைக்காக பிரார்த்தனை செய்து) அழைக்கிறார்களோ, - அவர்களோ தங்கள் இறைவன் பக்கம் தங்களில் மிக நெருங்கியவராக யார் ஆகுவது என்று (ஆர்வப்பட்டு) நன்மையை (அதிகம் செய்வதற்கு வழிகளை)த் தேடுகிறார்கள்; இன்னும், அவனுடைய கருணையை ஆதரவு வைக்கிறார்கள்; இன்னும், அவனுடைய தண்டனையைப் பயப்படுகிறார்கள். நிச்சயமாக உம் இறைவனின் தண்டனை பயத்திற்குரியதாக இருக்கிறது! (ஆகவே, அவர்களிடம் எப்படி இவர்கள் இரட்சிப்பைத் தேடமுடியும்)
Tamil Translation - Abdulhamid Baqawi57. இவர்கள் யாரை பிரார்த்தித்து அழைக்கிறார்களோ அவர்களுமோ தங்கள் இறைவனிடம் தங்களில் மிக நெருக்கமானவராக யார் ஆகமுடியும் என்பதற்காக நன்மை செய்வதையே ஆசை வைத்துக்கொண்டும், அவனுடைய அருளையே எதிர்பார்த்து அவனுடைய வேதனைக்குப் பயந்து கொண்டும் இருக்கிறார்கள். ஏனென்றால், நிச்சயமாக உமது இறைவனின் வேதனையோ, மிக மிக பயப்படக்கூடியதே!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70