قُل لَّوْ كَانَ مَعَهُۥٓ ءَالِهَةٌ كَمَا يَقُولُونَ إِذًا لَّٱبْتَغَوْا۟ إِلَىٰ ذِى ٱلْعَرْشِ سَبِيلًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! அவர்கள் கூறுவது போல் அவனுடன் (வேறு) பல கடவுள்கள் இருந்திருந்தால், அப்போது அர்ஷ் உடையவன் பக்கம் (அவனிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற விரும்பி) ஒரு வழியைத் தேடியிருப்பார்கள்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக! அவர்கள் கூறுவது போல் அவனுடன் (வேறு) பல கடவுள்கள் இருந்திருந்தால், அப்போது அர்ஷ்ஷுக்குரிய (உண்மையான இறை)வன் பக்கம் செல்வ(தற்கு; இன்னும், அவனை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றுவ)தற்கு ஒரு வழியைத் தேடியிருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi42. (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: நீங்கள் சொல்வது போல் அல்லாஹ்வுடன் வேறு தெய்வங்கள் இருந்தால், அவை அர்ஷையுடைய (அல்லாஹ்வாகிய அ)வன் பக்கம் செல்லக்கூடிய வழியைக் கண்டுபிடித்து (அவனிடம் சென்றே) இருக்கும்.