caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Israa அத்தியாயம், வசனம் 41

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 50 · 17:41

وَلَقَدْ صَرَّفْنَا فِى هَٰذَا ٱلْقُرْءَانِ لِيَذَّكَّرُوا۟ وَمَا يَزِيدُهُمْ إِلَّا نُفُورًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (மக்கள்) நல்லுபதேசம் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டவட்டமாக (பல நல்லுபதேசங்களை) விவரித்தோம். (ஆனால்) அது அவர்களுக்கு வெறுப்பைத் தவிர அதிகப்படுத்தவில்லை.
Tamil Translation - Omar Sharifமேலும், அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டவட்டமாக (பல நல்லுபதேசங்களையும் பல வகையான உதாரணங்களையும்) விவரித்தோம். ஆனால், அது அவர்களுக்கு வெறுப்பைத் தவிர அதிகப்படுத்தவில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi41. இவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இந்த குர்ஆனில் நிச்சயமாக நாம் பற்பல வகைகளில் (நல்லுபதேசங்களைக்) கூறியிருக்கிறோம். எனினும், (இவை அனைத்தும்) அவர்களுக்கு வெறுப்பையே தவிர அதிகப்படுத்தவில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70