أَفَأَصْفَىٰكُمْ رَبُّكُم بِٱلْبَنِينَ وَٱتَّخَذَ مِنَ ٱلْمَلَٰٓئِكَةِ إِنَٰثًا إِنَّكُمْ لَتَقُولُونَ قَوْلًا عَظِيمًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(மனிதர்களே!) உங்கள் இறைவன், ஆண் பிள்ளைகளை உங்களுக்குச் சொந்தமாக்கிவிட்டு, வானவர்களிலிருந்து (உங்கள் கற்பனை படி) பெண்களை (தனக்கு பிள்ளைகளாக) ஆக்கிக் கொண்டானா? நிச்சயமாக நீங்கள் பெரிய (பொய்யான) கூற்றை கூறுகின்றீர்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, (மனிதர்களே!) உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண் பிள்ளைகளை சொந்தமாக்கிவிட்டு, (உங்கள் கற்பனை படி தமக்கு) வானவர்களை பெண் பிள்ளைகளாக ஆக்கிக் கொண்டானா? நிச்சயமாக நீங்கள் பெரிய (அபாண்டமான பொய்யான) கூற்றை கூறுகிறீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi40. (மனிதர்களே!) உங்கள் இறைவன், ஆண் மக்களை உங்களுக்குச் சொந்தமாக்கி விட்டு, வானவர்களைத் தனக்குப் பெண் மக்களாக ஆக்கிக் கொண்டானா? (இவ்வாறு கூறுகின்ற) நீங்கள் நிச்சயமாக மகத்தான (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள்.