وَأَوْفُوا۟ ٱلْكَيْلَ إِذَا كِلْتُمْ وَزِنُوا۟ بِٱلْقِسْطَاسِ ٱلْمُسْتَقِيمِ ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் அளந்தால் (அந்த) அளவையை முழுமையாக்குங்கள்; சரியான (நீதமான) தராசைக் கொண்டு (பொருள்களை) நிறுங்கள். அது மிகச் சிறந்தது; முடிவால் மிக அழகியது.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நீங்கள் (பொருள்களை) அளந்(து கொடுத்)தால் (அந்த) அளவையை முழுமையாக்குங்கள்; இன்னும், சரியான (நீதமான) தராசைக் கொண்டு (பொருள்களை) நிறு(த்துக் கொடு)ங்கள். அது மிகச் சிறந்ததும் முடிவால் மிக அழகியதும் ஆகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi35. நீங்கள் அளந்தால் முழுமையாக அளங்கள்; (நிறுத்தால்) சரியான எடையைக் கொண்டு நிறுங்கள். இது (உங்களுக்கு) மிக்க நன்று; மிக்க அழகான பலனையும் தரும்.