وَلَا تَقْرَبُوا۟ مَالَ ٱلْيَتِيمِ إِلَّا بِٱلَّتِى هِىَ أَحْسَنُ حَتَّىٰ يَبْلُغَ أَشُدَّهُۥ وَأَوْفُوا۟ بِٱلْعَهْدِ إِنَّ ٱلْعَهْدَ كَانَ مَسْـُٔولًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅநாதையின் செல்வத்தை அவர் தன் வாலிபத்தை அடையும் வரை மிக அழகிய முறையில் தவிர நெருங்காதீர்கள். ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக ஒப்பந்தம் விசாரிக்கப்படுவதாக இருக்கிறது.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அனாதையின் செல்வத்தை அவர் தன் வாலிபத்தை அடையும் வரை மிக அழகிய முறையில் தவிர நெருங்காதீர்கள். மேலும், உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக உடன்படிக்கை (குறித்து மறுமையில்) விசாரிக்கப்படக் கூடியதாக இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi34. (நம்பிக்கையாளர்களே!) அநாதைக் குழந்தைகள் வாலிபத்தை அடையும் வரை (அவர்களுடைய பொருளுக்குப் பாதுகாப்பாளராக இருந்தால்) நீங்கள் நியாயமான முறையிலேயே தவிர அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள். உங்கள் வாக்குறுதியை நீங்கள் முழுமையாக நிறைவேற்றுங்கள். ஏனென்றால், மறுமையில் வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும்.