وَلَا تَقْتُلُوا۟ ٱلنَّفْسَ ٱلَّتِى حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلْحَقِّ وَمَن قُتِلَ مَظْلُومًا فَقَدْ جَعَلْنَا لِوَلِيِّهِۦ سُلْطَٰنًا فَلَا يُسْرِف فِّى ٱلْقَتْلِ إِنَّهُۥ كَانَ مَنصُورًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் புனிதமாக்கிய உயிரை உரிமையின்றி கொல்லாதீர்கள். எவர் அநீதி செய்யப்பட்டவராக கொல்லப்பட்டாரோ, அவருடைய உறவினருக்கு அதிகாரத்தை நாம் ஏற்படுத்தினோம். ஆகவே அவர் (-அந்த உறவினர் பழிக்குப்பழி) கொல்வதில் அளவு கடக்க வேண்டாம். நிச்சயமாக அவர் உதவி செய்யப்பட்டவராக இருக்கிறார். (கொன்றவனை கொன்று பழிதீர்க்க அல்லது நஷ்டஈடு பெற கொல்லப்பட்டவரின் வாரிசுகளுக்கு அரசாங்கம் உதவ வேண்டும்.)
Tamil Translation - Omar Sharifமேலும், அல்லாஹ் புனிதமாக்கிய உயிரை உரிமையின்றி கொல்லாதீர்கள். இன்னும், எவர் அநீதி செய்யப்பட்டவராக கொல்லப்பட்டாரோ, (அவருக்காக பழிக்குப் பழி வாங்கும்) அதிகாரத்தை அவருடைய உறவினருக்கு நாம் ஆக்கினோம். ஆகவே, அவர் (-அந்த உறவினர் பழிக்குப்பழி) கொல்வதில் அளவு கடக்க வேண்டாம். நிச்சயமாக அவர் (-கொல்லப்பட்டவரின் உறவினர்) உதவி செய்யப்பட்டவராக இருக்கிறார்.[1]
Tamil Translation - Abdulhamid Baqawi33. (எவரையும் கொலை செய்வது ஆகாதென்று) அல்லாஹ் தடுத்திருக்க, நீங்கள் எம்மனிதனையும் நியாயமின்றி கொலை செய்து விடாதீர்கள். எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டுவிட்டால், அவனுடைய வாரிசுகளுக்கு(ப் பழிவாங்க) நாம் அதிகாரம் அளித்திருக்கிறோம். ஆனால், (கொலையாளியான) அவனைப் பழிவாங்குவதில் அளவு கடந்து (சித்திரவதை செய்து)விட வேண்டாம். நிச்சயமாக அவன் (பழிவாங்க) உதவி செய்யப்படுவான். (அதாவது: கொலைக்கு பழிவாங்க வாரிசுகளுக்கு உதவி செய்ய வேண்டும்.)