مَّن كَانَ يُرِيدُ ٱلْعَاجِلَةَ عَجَّلْنَا لَهُۥ فِيهَا مَا نَشَآءُ لِمَن نُّرِيدُ ثُمَّ جَعَلْنَا لَهُۥ جَهَنَّمَ يَصْلَىٰهَا مَذْمُومًا مَّدْحُورًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவர், (அவசரமான) இம்மை (வாழ்க்கை)யை (மட்டும்) நாடுகின்றவராக இருப்பாரோ (அப்படிப்பட்டவர்களில்) நாம் நாடுபவருக்கு நாம் நாடுவதை (மட்டும்) அதில் முற்படுத்திக் கொடுப்போம். பிறகு, அவருக்கு நரகத்தை (தங்குமிடமாக) ஆக்குவோம். அவர் இகழப்பட்டவராக, (நம் அருளைவிட்டு) தூரமாக்கப்பட்டவராக (கேவலமாக தள்ளப்பட்டு) அதில் எரிந்து பொசுங்குவார்.
Tamil Translation - Omar Sharifஎவர், (அவசரமான) இம்மை (வாழ்க்கை)யை (மட்டும்) நாடுகின்றவராக இருப்பாரோ (அப்படிப்பட்டவர்களில்) நாம் நாடுபவருக்கு (உலக செல்வத்தில்) நாம் நாடுவதை (மட்டும்) அதில் முற்படுத்திக் கொடுப்போம். பிறகு, அவருக்கு நரகத்தை (தங்குமிடமாக) ஆக்குவோம். அவர் இகழப்பட்டவராக, (நம் அருளைவிட்டு) தூரமாக்கப்பட்டவராக (கேவலமாக தள்ளப்பட்டு) அதில் நுழை(ந்து எரிந்து பொசுங்கு)வார்.
Tamil Translation - Abdulhamid Baqawi18. எவர்கள், (மறுமையைப் புறக்கணித்துவிட்டு) இம்மையை மட்டும் விரும்புகிறார்களோ அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடியதை இம்மையிலேயே கொடுத்து விடுகிறோம். பின்னர், மறுமையில் நரகத்தைத்தான் அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறோம். அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களாகவும், சபிக்கப்பட்டவர்களாகவும் அதில் நுழைவார்கள்.