وَكَمْ أَهْلَكْنَا مِنَ ٱلْقُرُونِ مِنۢ بَعْدِ نُوحٍ وَكَفَىٰ بِرَبِّكَ بِذُنُوبِ عِبَادِهِۦ خَبِيرًۢا بَصِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநூஹுக்குப் பின்னர் எத்தனையோ (பல) தலைமுறைகளை அழித்தோம். தன் அடியார்களின் பாவங்களை ஆழ்ந்தறிய, உற்று நோக்க உம் இறைவனே போதுமானவன்.
Tamil Translation - Omar Sharifமேலும், நூஹுக்குப் பின்னர் எத்தனையோ (பல) தலைமுறைகளை அழித்தோம். இன்னும், தன் அடியார்களின் பாவங்களை ஆழ்ந்தறிந்தவனாக, உற்று நோக்கியவனாக உம் இறைவனே போதுமானவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi17. நூஹ்வுக்குப் பின்னர் நாம் எத்தனையோ வகுப்பாரை (அவர்களின் அநியாயத்தின் காரணமாக) அழித்திருக்கிறோம். தன் அடியார்களின் பாவங்களை உற்று நோக்கி அறிந்து கொள்வதற்கு உமது இறைவனே போதுமானவன். (மற்றெவரின் உதவியும் அவனுக்குத் தேவையில்லை.)