وَإِذَآ أَرَدْنَآ أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا۟ فِيهَا فَحَقَّ عَلَيْهَا ٱلْقَوْلُ فَدَمَّرْنَٰهَا تَدْمِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஓர் ஊரை நாம் அழிக்க நாடினால், அதன் சுகவாசிகளை (நன்மையானவற்றை செய்யுமாறு) ஏவுவோம். (ஆனால், அவற்றை செய்யாமல்) அவர்கள் அதில் பாவம் புரிவார்கள். ஆகவே, அதன் மீது நம் (வேதனையின்) வாக்கு நிகழ்ந்துவிடும். அதை நாம் முற்றிலும் தரைமட்டமாக்கி விடுவோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், ஓர் ஊரை நாம் அழிக்க நாடினால், அதில் வசதி படைத்தவர்களை (நன்மையைக் கொண்டு) ஏவுவோம். (ஆனால், அவர்கள் நமது கட்டளைக்கு மாறு செய்து) அதில் பாவம் செய்வார்கள். ஆகவே, அதன் மீது நமது (தண்டனையின்) வாக்கு உறுதியாகிவிடும். ஆகவே, அதை நாம் முற்றிலும் தரைமட்டமாக்கி (அழித்து) விடுவோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi16. ஓர் ஊரை (அவ்வூராரின் தீய செயலின் காரணமாக) நாம் அழித்துவிடக் கருதினால், அதில் சுகமாக வாழ்பவர்களை நன்மையைக் கொண்டு நாம் ஏவுகிறோம். ஆனால், அவர்கள் அதில் விஷமம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். பின்னர், அவர்கள் மீது நம் வாக்கு ஏற்பட்டு அவ்வூரை நாம் அடியோடு அழித்து விடுகிறோம்.