مَّنِ ٱهْتَدَىٰ فَإِنَّمَا يَهْتَدِى لِنَفْسِهِۦ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ وَمَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّىٰ نَبْعَثَ رَسُولًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவர் நேர்வழி செல்வாரோ அவர் நேர்வழி செல்வதெல்லாம் தன் நன்மைக்காகவே. எவர் வழிகெடுவாரோ அவர் வழிகெடுவதெல்லாம் தனக்கெதிராகத் தான். சுமக்கக்கூடியது மற்றொன்றின் (பாவச்) சுமையை சுமக்காது. நாம் ஒரு தூதரை அனுப்பும் வரை (எவரையும்) வேதனை செய்பவர்களாக நாம் இருக்கவில்லை.
Tamil Translation - Omar Sharifஎவர் நேர்வழி செல்வாரோ அவர் நேர்வழி செல்வதெல்லாம் தன் நன்மைக்காகவே. இன்னும், எவர் வழிகெடுவாரோ அவர் வழிகெடுவதெல்லாம் தனக்கெதிராகத்தான். மேலும், பாவியான ஓர் ஆன்மா மற்றோர் ஆன்மாவின் பாவத்திற்கு பொறுப்பாகாது. இன்னும், நாம் ஒரு தூதரை அனுப்பும் வரை (எவரையும்) தண்டிப்பவர்களாக நாம் இருக்கவில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi15. எவன் நேரான வழியில் செல்கிறானோ அவன் தன் நன்மைக்காகவே நேரான வழியில் செல்கிறான். எவன் தவறான வழியில் செல்கிறானோ அவன் (தவறான வழியில் சென்று) தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறான். ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான். (நமது) தூதர் ஒருவரை அனுப்பாத வரை நாம் (எவரையும்) வேதனை செய்வதில்லை.