وَلَا تَتَّخِذُوٓا۟ أَيْمَٰنَكُمْ دَخَلًۢا بَيْنَكُمْ فَتَزِلَّ قَدَمٌۢ بَعْدَ ثُبُوتِهَا وَتَذُوقُوا۟ ٱلسُّوٓءَ بِمَا صَدَدتُّمْ عَن سَبِيلِ ٱللَّهِ وَلَكُمْ عَذَابٌ عَظِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்கள் சத்தியங்களை உங்களுக்கு மத்தியில் ஏமாற்றமாக, (வஞ்சகமாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள். (அவ்வாறு செய்தால்) பாதம் அது நிலைபெற்ற பின் சறுகிவிடும். (சத்தியத்தை முறித்து) அல்லாஹ்வின் பாதையை விட்டு நீங்கள் தடுத்த காரணத்தால் துன்பத்தை அனுபவிப்பீர்கள். இன்னும் உங்களுக்கு மகத்தானதொரு வேதனை உண்டு.
Tamil Translation - Omar Sharifஉங்கள் சத்தியங்களை உங்களுக்கு மத்தியில் (பிறரை) ஏமாற்றுவதற்காக, (வஞ்சிப்பதற்காக) ஆக்கிக் கொள்ளாதீர்கள். (அவ்வாறு செய்தால், இஸ்லாமிய மார்க்கத்தில் உங்கள் கால்) பாதம் அது நிலைபெற்ற பின் (அதிலிருந்து) சருகி (வழிகேட்டில் சென்று) விடும். இன்னும், (சத்தியத்தை முறித்து) அல்லாஹ்வின் பாதையை விட்டும் நீங்கள் தடுத்த காரணத்தால் துன்பத்தை அனுபவிப்பீர்கள். இன்னும், உங்களுக்கு மகத்தானதொரு தண்டனை உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi94. உங்களுக்குள் நீங்கள் (விஷமம் செய்வதற்காக) உங்கள் சத்தியத்தைக் காரணமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அப்படி செய்தால் நிலைபெற்ற (உங்கள்) பாதம் பெயர்ந்து உறுதி குலைந்துவிடும். தவிர, (சத்தியத்தை முறிப்பதினால்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் நீங்கள் தடுத்துக் கொள்வதன் காரணமாக பல துன்பங்களையும் நீங்கள் அனுபவிக்கும்படி நேரிடும். கடுமையான வேதனையும் உங்களுக்குக் கிடைக்கும்.