ٱلَّذِينَ تَتَوَفَّىٰهُمُ ٱلْمَلَٰٓئِكَةُ طَيِّبِينَ يَقُولُونَ سَلَٰمٌ عَلَيْكُمُ ٱدْخُلُوا۟ ٱلْجَنَّةَ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அல்லாஹ்வை அஞ்சியவர்கள்) நல்லவர்களாக இருக்கும் நிலையில் வானவர்கள் அவர்களை உயிர் கைப்பற்றுகின்றனர். “ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகுக!) நீங்கள் (நற்செயல்) செய்து கொண்டிருந்ததின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்” என்று (வானவர்கள்) கூறுவார்கள்.
Tamil Translation - Omar Sharifஇறையச்சம் உள்ளவர்களோ நல்லவர்களாக இருக்கும் நிலையில் வானவர்கள் அவர்களை உயிர் கைப்பற்றுகிறார்கள். “ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகுக!) நீங்கள் (நற்செயல்) செய்து கொண்டிருந்ததின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்” என்று (வானவர்கள் அவர்களிடம்) கூறுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi32. இவர்களின் உயிரை வானவர்கள், அவர்கள் நல்லவர்களாக இருக்கும் நிலைமையில் கைப்பற்றுகின்றனர். (அப்பொழுது அவர்களை நோக்கி) ‘‘ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்கு ஈடேற்றம் உண்டாவதாக!) நீங்கள் (நற்செயல்) செய்து கொண்டிருந்ததின் காரணமாக சொர்க்கத்திற்குச் செல்லுங்கள்'' என்று கூறுவார்கள்.