وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا۟ بِمِثْلِ مَا عُوقِبْتُم بِهِۦ وَلَئِن صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِّلصَّٰبِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தண்டித்தால் நீங்கள் தண்டிக்கப்பட்டது போன்றே தண்டியுங்கள். நீங்கள் பொறுத்தால் அதுதான் பொறுமையாளர்களுக்கு மிக நல்லது!
Tamil Translation - Omar Sharif(நம்பிக்கையாளர்களே! உங்களை தாக்கியவர்களை) நீங்கள் தண்டித்தால் (வரம்பு மீறாமல்) நீங்கள் தண்டிக்கப்பட்டது போன்றே தண்டியுங்கள். நீங்கள் பொறு(மையாக இருந்து அவர்களை மன்னி)த்தால் அதுதான் பொறுமையாளர்களுக்கு மிக நல்லது!
Tamil Translation - Abdulhamid Baqawi126. (நம்பிக்கையாளர்களே! உங்களைத் தாக்கியவர்களை) நீங்கள் பதிலுக்குப் பதிலாய்த் தாக்கக் கருதினால் உங்களை அவர்கள் தாக்கிய அளவே அவர்களை நீங்கள் தாக்குங்கள். (அதற்கு அதிகமாக அல்ல. தவிர, உங்களைத் தாக்கியதை) நீங்கள் சகித்துக் கொண்டாலோ அது சகிப்பவர்களுக்கு மிக நன்றே!