caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nahl அத்தியாயம், வசனம் 127

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 70 · 16:127

وَٱصْبِرْ وَمَا صَبْرُكَ إِلَّا بِٱللَّهِ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُ فِى ضَيْقٍ مِّمَّا يَمْكُرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) பொறுப்பீராக. அல்லாஹ்வைக் கொண்டே தவிர உம் பொறுமை இல்லை. அவர்கள் மீது கவலைப்படாதீர்; அவர்கள் சூழ்ச்சி செய்வதைப் பற்றி நெருக்கடியில் (நீர்) ஆகாதீர்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) பொறுமையாக இருப்பீராக. மேலும், அல்லாஹ்விற்காகவே தவிர உம் பொறுமை இல்லை. மேலும், அவர்கள் மீது கவலைப்படாதீர்! இன்னும், அவர்கள் சூழ்ச்சி செய்வதைப் பற்றி (மன) நெருக்கடியில் நீர் ஆகிவிடாதீர்.
Tamil Translation - Abdulhamid Baqawi127. ஆகவே, (நபியே!) சகித்துக்கொள்வீராக. எனினும், அல்லாஹ்வின் உதவியின்றி சகித்துக் கொள்ள உம்மால் முடியாது. அவர்களுக்காக (எதைப் பற்றியும்) கவலைப்படாதீர். அவர்கள் செய்கின்ற சூழ்ச்சிகளைப் பற்றி நெருக்கடியிலும் ஆகாதீர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70