ٱدْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِٱلْحِكْمَةِ وَٱلْمَوْعِظَةِ ٱلْحَسَنَةِ وَجَٰدِلْهُم بِٱلَّتِى هِىَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) ஞானம் இன்னும் அழகிய உபதேசத்தைக் கொண்டு உம் இறைவனுடைய பாதையின் பக்கம் (மக்களை) அழைப்பீராக! மிக அழகிய முறையில் அவர்களிடம் தர்க்கிப்பீராக! நிச்சயமாக உம் இறைவன்தான் அவனுடைய பாதையிலிருந்து வழி தவறியவரை மிக அறிந்தவன் ஆவான். இன்னும் அவன் நேர்வழி செல்வோரையும் மிக அறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) ஞானம்; இன்னும், அழகிய உபதேசத்தின் மூலம் உம் இறைவனுடைய பாதையின் பக்கம் (மக்களை) அழைப்பீராக! மேலும், மிக அழகிய முறையில் அவர்களிடம் தர்க்கிப்பீராக! நிச்சயமாக உம் இறைவன், - அவனுடைய பாதையிலிருந்து யார் வழி தவறினாரோ அவரை - மிக அறிந்தவன் ஆவான். இன்னும், நேர்வழிபெற்றவர்களையும் அவன் மிக அறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi125. (நபியே! மனிதர்களை) மதிநுட்பத்தைக் கொண்டும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உமது இறைவனுடைய வழியின் பக்கம் அழைப்பீராக! மேலும், அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்வீராக. உமது இறைவனுடைய வழியிலிருந்து வழி தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அவன்தான் நன்கறிவான். நேரான வழியிலிருப்பவர்கள் யார் என்பதையும் அவன்தான் நன்கறிவான்.