caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nahl அத்தியாயம், வசனம் 111

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 70 · 16:111

يَوْمَ تَأْتِى كُلُّ نَفْسٍ تُجَٰدِلُ عَن نَّفْسِهَا وَتُوَفَّىٰ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒவ்வொரு ஆன்மாவும் தன்னைப் பற்றி தர்க்கித்ததாகவே அது வருகிற நாளில் (அல்லாஹ் அந்த தியாகிகளை மன்னிப்பான்). (அந்நாளில்) ஒவ்வொரு ஆன்மாவும் தான் செய்தவற்றுக்கு முழு கூலி கொடுக்கப்படும். அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஒவ்வோர் ஆன்மாவும் தன்னைப் பற்றி தானே தர்க்கித்ததாக வருகிற நாளில் (அல்லாஹ் அந்த தியாகிகளை மன்னிப்பான்). மேலும், (அந்நாளில்) ஒவ்வோர் ஆன்மாவுக்கும் அது செய்த செயல்களுக்கு முழுமையாக கூலி கொடுக்கப்படும். மேலும், அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi111. ஒவ்வோர் ஆத்மாவும் (எவரையும் கவனியாது) தன்னைப் பற்றி (மட்டும்) பேசுவதற்காக வருகின்ற (நாளை நபியே! அவர்களுக்கு ஞாபக மூட்டுவீராக. அந்)நாளில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதன் செயலுக்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். (அதைக் கூட்டியோ குறைத்தோ எவ்வகையிலும்) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70