ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ هَاجَرُوا۟ مِنۢ بَعْدِ مَا فُتِنُوا۟ ثُمَّ جَٰهَدُوا۟ وَصَبَرُوٓا۟ إِنَّ رَبَّكَ مِنۢ بَعْدِهَا لَغَفُورٌ رَّحِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, தாங்கள் துன்புறுத்தப்பட்ட பின்பு நாடு துறந்து, பிறகு போர் புரிந்து, (சோதனைகளை) சகித்தவர்களுக்கு நிச்சயமாக உம் இறைவன், இவற்றுக்குப் பின் (அவர்களை மன்னித்து கருணை காட்டும்) மகா மன்னிப்பாளன், மிகக் கருணையாளன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifபிறகு, எவர்கள் தாங்கள் துன்புறுத்தப்பட்ட பின்பு ஹிஜ்ரத் செய்து (தமது தாய் நாட்டை துறந்து), பிறகு போர் புரிந்து, (சோதனைகளில்) பொறுமையாக இருந்தார்களோ அவர்களுக்கு நிச்சயமாக உம் இறைவன், இவற்றுக்குப் பின்னர் (அவர்களை மன்னித்து கருணை காட்டும்) மகா மன்னிப்பாளனாக, மகா கருணையாளனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi110. (நபியே!) எவர்கள் (எதிரிகளால்) துன்புறுத்தப்பட்டு, பின்னர் (தங்கள் இல்லத்திலிருந்து) வெளிப்பட்டு, போரும் புரிந்து (பல சிரமங்களையும்) சகித்துக் கொண்டு உறுதியாக இருந்தார்களோ அவர்களுக்(கு அருள் புரிவதற்)காகவே நிச்சயமாக உமது இறைவன் இருக்கிறான். நிச்சயமாக உமது இறைவன் இதற்குப் பின்னரும் (அவர்களை) மன்னிப்பவன் (அவர்கள் மீது) கருணையுடையவன் ஆவான்.