قُلْ نَزَّلَهُۥ رُوحُ ٱلْقُدُسِ مِن رَّبِّكَ بِٱلْحَقِّ لِيُثَبِّتَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَهُدًى وَبُشْرَىٰ لِلْمُسْلِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“நம்பிக்கை கொண்டவர்களை உறுதிப்படுத்துவதற்காகவும், நேர்வழியாகவும் முஸ்லிம்களுக்கு நற்செய்தியாகவும் இதை உம் இறைவனிடமிருந்து ‘ரூஹுல் குதுஸ்’ (என்றழைக்கப்படும் ஜிப்ரயீல்) உண்மையைக் கொண்டு இறக்கினார்” என்று (நபியே!) கூறுவீராக!
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: “நம்பிக்கை கொண்டவர்களை உறுதிப்படுத்துவதற்காகவும், (எல்லா மக்களுக்கும்) நேர்வழியாகவும் (குறிப்பாக அதன்படி நடக்கின்ற) முஸ்லிம்களுக்கு நற்செய்தியாகவும் இதை உம் இறைவனிடமிருந்து ‘ரூஹுல் குதுஸ்’ (என்ற ஜிப்ரயீல்) உண்மையுடன் இறக்கினார்.”
Tamil Translation - Abdulhamid Baqawi102. மெய்யாகவே இதை உமது இறைவனிடமிருந்து ‘ரூஹுல் குதுஸ்' (என்னும் ஜிப்ரயீல்)தான் இறக்கி வைத்தார் என்று (நபியே!) கூறுவீராக!. (இந்த குர்ஆன் இறைவனுக்கு) நம்பிக்கைக் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டவர்களுக்கு நேரான வழியாகவும் நற்செய்தியாகவும் இருக்கிறது.