caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nahl அத்தியாயம், வசனம் 101

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 70 · 16:101

وَإِذَا بَدَّلْنَآ ءَايَةً مَّكَانَ ءَايَةٍ وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُنَزِّلُ قَالُوٓا۟ إِنَّمَآ أَنتَ مُفْتَرٍۭ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) நாம் ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை மாற்றினால் - அல்லாஹ் தான் இறக்குவதை மிக அறிந்தவனாக இருக்கிறான் -இவர்கள் (உம்மை நோக்கி) “நிச்சயமாக நீர் (தானாக இதை) இட்டுக்கட்டுபவர்தான்” என்று கூறுகின்றனர். மாறாக இவர்களில் அதிகமானவர்கள் (இதன் உண்மையை) அறிய மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) நாம் ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை மாற்றினால், - அல்லாஹ்வோ தான் இறக்குவதை மிக அறிந்தவனாக இருக்கிறான், - இவர்கள் (உம்மை நோக்கி) “நிச்சயமாக நீர் (தானாக இதை) இட்டுக்கட்டுகிறீர்” என்று கூறுகிறார்கள். மாறாக, இவர்களில் அதிகமானவர்கள் (இதன் உண்மையை) அறிய மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi101. (நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தைக் கொண்டு மாற்றினால் இவர்கள் (உம்மை நோக்கி) ‘‘நிச்சயமாக நீர் பொய்யர்'' என்று கூறுகின்றனர். எ(ந்த நேரத்தில் எந்தக் கட்டளையை, எந்த வசனத்)தை அருள வேண்டுமென்பதை அல்லாஹ் நன்கறிவான்; இவர்களில் பெரும்பாலானவர்கள் (இந்த உண்மையை) அறியமாட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70