وَلَقَدْ نَعْلَمُ أَنَّهُمْ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُۥ بَشَرٌ لِّسَانُ ٱلَّذِى يُلْحِدُونَ إِلَيْهِ أَعْجَمِىٌّ وَهَٰذَا لِسَانٌ عَرَبِىٌّ مُّبِينٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“அவருக்குக் கற்றுக் கொடுப்பதெல்லாம் (ரோமானிய) மனிதர்தான் (அல்லாஹ் அல்ல)” என்று அவர்கள் கூறுவதை திட்டவட்டமாக அறிவோம். எவர் பக்கம் (இதை) சேர்க்கிறார்களோ அவருடைய மொழி அரபியல்லாததாகும். இதுவோ (நாகரிகமான) தெளிவான அரபி மொழியாகும்.
Tamil Translation - Omar Sharif“அவருக்குக் கற்றுக் கொடுப்பதெல்லாம் (ரோம் நாட்டை சேர்ந்த) மனிதர்தான் (அல்லாஹ் அல்ல)” என்று அவர்கள் கூறுவதை திட்டவட்டமாக அறிவோம். எவர் பக்கம் (இதை) அவர்கள் சேர்க்கிறார்களோ அவருடைய மொழி அரபி அல்லாததாகும். இதுவோ (நாகரிகமான) தெளிவான அரபி மொழியாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi103. (நபியே! ‘‘இவ்வேத வசனங்களை ரோமிலிருந்து வந்திருக்கும்) ஒரு (கிறிஸ்தவ) மனிதன்தான் நிச்சயமாக உமக்குக் கற்றுக் கொடுக்கிறான்; (இறைவன் கற்றுக்கொடுக்கவில்லை)'' என்று அவர்கள் கூறுவதை நிச்சயமாக நாம் அறிவோம். எவன் (உமக்குக்) கற்றுக் கொடுப்பதாக அவர்கள் கூறுகிறார்களோ அ(ந்தக் கிறிஸ்த)வன் (அரபி மொழியை ஒரு சிறிதும் அறியாத) அஜமி. இவ்வேதமோ மிக (நாகரிகமான) தெளிவான அரபி மொழியில் இருக்கிறது. (ஆகவே, அவர்கள் கூறுவது சரியன்று.)