بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ أَتَىٰٓ أَمْرُ ٱللَّهِ فَلَا تَسْتَعْجِلُوهُ سُبْحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வுடைய கட்டளை வந்தே தீரும்! அதை நீங்கள் அவசரமாக தேடாதீர்கள். அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணைவைப்பதை விட்டு அவன் முற்றிலும் உயர்ந்தவன்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்வுடைய கட்டளை வந்தே தீரும்! அதை (உடனே கொண்டுவரும்படி கூறி) நீங்கள் அவசரப்படுத்தாதீர்கள். அவன் மிகப் பரிசுத்தமானவன். இன்னும், அவர்கள் (-சிலை வணங்கிகள்) இணைவைப்பதை விட்டும் அவன் முற்றிலும் உயர்ந்தவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi1. (இதோ) அல்லாஹ்வுடைய கட்டளை வந்துவிட்டது! அதைப்பற்றி நீங்கள் அவசரப்பட வேண்டாம். அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணைவைப்பவற்றை விட மிக்க மேலானவன்.