caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nahl அத்தியாயம், வசனம் 2

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 70 · 16:2

يُنَزِّلُ ٱلْمَلَٰٓئِكَةَ بِٱلرُّوحِ مِنْ أَمْرِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦٓ أَنْ أَنذِرُوٓا۟ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱتَّقُونِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் தன் கட்டளைப்படி (வஹ்யி எனும்) உயிருடன், தன் அடியார்களில் தான் நாடுகின்றவர் மீது வானவர்களை இறக்குகிறான். “நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர அறவே இல்லை; ஆகவே (என்னை) அஞ்சுங்கள்” என்று நீங்கள் (மனிதர்களை) எச்சரியுங்கள்.
Tamil Translation - Omar Sharifஅவன், தன் கட்டளைப்படி (வஹ்யி எனும்) உயிருடன், தன் அடியார்களில் தான் நாடுகின்றவர் மீது வானவர்களை இறக்குகிறான், “நிச்சயமாக என்னைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை; ஆகவே, (என்னை வணங்கி, என்னை மட்டுமே) அஞ்சுங்கள்” என்று (தூதர்களே!) நீங்கள் எச்சரியுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi2. அவன் வானவர்களுக்கு வஹ்யி கொடுத்து, தன் அடியார்களில் தான் விரும்பியவர்களிடம் அனுப்பி வைத்து ‘‘வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறெவனுமில்லை; நீங்கள் எனக்கே பயப்படுங்கள்'' என்று எச்சரிக்கை செய்யுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70