caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hijr அத்தியாயம், வசனம் 8

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 54 · 15:8

مَا نُنَزِّلُ ٱلْمَلَٰٓئِكَةَ إِلَّا بِٱلْحَقِّ وَمَا كَانُوٓا۟ إِذًا مُّنظَرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionசத்தியத்தைக் கொண்டே தவிர வானவர்களை நாம் இறக்க மாட்டோம். (அப்படி இறக்கினால்) அப்போது அவர்கள் அவகாசமளிக்கப்படுபவர்களாக இருக்கமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஉண்மை(யான தண்டனை)யைக் கொண்டே தவிர வானவர்களை நாம் (பூமிக்கு) இறக்க மாட்டோம். மேலும், (அப்படி இறக்கி, அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்றால்) அப்போது அவர்கள் அவகாசம் கொடுக்கப்பட்டவர்களாக இருக்கமாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi8. (நபியே!) நாம் வானவர்களை இறக்கிவைப்பதெல்லாம் எவருடைய காரியத்தையும் அழித்து முடித்துவிடக் கருதினால்தான். அச்சமயம் அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படுவதில்லை. (உடனே அழிக்கப்பட்டுவிடுவர்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70