قَالَ رَبِّ بِمَآ أَغْوَيْتَنِى لَأُزَيِّنَنَّ لَهُمْ فِى ٱلْأَرْضِ وَلَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“என் இறைவா! என்னை நீ வழிகெடுத்ததன் காரணமாக பூமியில் நிச்சயமாக (அசிங்கமான செயல்களை) அவர்களுக்கு அலங்கரிப்பேன்; இன்னும் நிச்சயமாக அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.
Tamil Translation - Omar Sharif(இப்லீஸ்) கூறினான்: “என் இறைவா! என்னை நீ வழிகெடுத்ததன் காரணமாக பூமியில் (அசிங்கமான செயல்களை) அவர்களுக்கு நிச்சயமாக நான் அலங்கரிப்பேன்; இன்னும், நிச்சயமாக அவர்கள் அனைவரையும் நான் வழிகெடு(க்க முயற்சி)ப்பேன்,”
Tamil Translation - Abdulhamid Baqawi39. அதற்கவன் ‘‘என் இறைவனே! நீ என்னை வழி கெடுத்ததன் காரணமாக பூமியிலுள்ள (பொருள்களை) நான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்.