أَلَمْ يَأْتِكُمْ نَبَؤُا۟ ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ وَٱلَّذِينَ مِنۢ بَعْدِهِمْ لَا يَعْلَمُهُمْ إِلَّا ٱللَّهُ جَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ فَرَدُّوٓا۟ أَيْدِيَهُمْ فِىٓ أَفْوَٰهِهِمْ وَقَالُوٓا۟ إِنَّا كَفَرْنَا بِمَآ أُرْسِلْتُم بِهِۦ وَإِنَّا لَفِى شَكٍّ مِّمَّا تَدْعُونَنَآ إِلَيْهِ مُرِيبٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களுக்கு முன்னர் இருந்த நூஹ்வுடைய மக்கள், ஆது, ஸமூது இன்னும் அவர்களுக்குப் பின்னர் வாழ்ந்தவர்களுடைய சரித்திரம் உமக்கு வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வைத் தவிர எவரும் அறியமாட்டார். அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கமே திருப்பினர். மேலும் (தூதர்களை நோக்கி,) “நிச்சயமாக நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நாங்கள் நிராகரித்தோம். நீங்கள் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அதில் நிச்சயமாக நாங்கள் ஆழமான சந்தேகத்தில் இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
Tamil Translation - Omar Sharifஉங்களுக்கு முன்னர் இருந்த நூஹ்வுடைய மக்கள்; ஆது மக்கள்; ஸமூது மக்கள்; இன்னும், அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுடைய சரித்திரம் உங்களுக்கு வரவில்லையா? அல்லாஹ்வைத் தவிர (யாரும்) அவர்களை அறியமாட்டார். அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். ஆக, அவர்கள் (கோபத்தால்) தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கமே திருப்பினர். இன்னும், (தூதர்களை நோக்கி) “நிச்சயமாக நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நாங்கள் நிராகரித்தோம். மேலும், நீங்கள் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அதில் நிச்சயமாக நாங்கள் ஆழமான சந்தேகத்தில் இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi9. உங்களுக்கு முன்னர் சென்றுபோன நூஹ், ஆது, ஸமூது இன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுடைய சரித்திரம் உங்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்க(ளின் விபரங்க)ளை அல்லாஹ்வைத் தவிர மற்றெவரும் அறிந்துகொள்ள முடியாது. அந்த மக்களிடம் அனுப்பப்பட்ட (நம்) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்(து நேரான வழிக்கு ‘‘வாருங்கள் வாருங்கள்'' என்று தங்கள் இரு கைகளையும் விரித்து அழைத்)த சமயத்தில், அவர்களுடைய கைகளை அவர்களுடைய வாயின் பக்கமே தட்டிவிட்டு (அவர்களை நோக்கி,) ‘‘நிச்சயமாக நாங்கள் (இறைவனின் கட்டளை என்று) நீங்கள் கொண்டு வந்திருப்பதை நிராகரிக்கிறோம். நீங்கள் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்'' என்று கூறினார்கள்.