caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ibrahim அத்தியாயம், வசனம் 6

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 72 · 14:6

وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ ٱذْكُرُوا۟ نِعْمَةَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنجَىٰكُم مِّنْ ءَالِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوٓءَ ٱلْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَآءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَآءَكُمْ وَفِى ذَٰلِكُم بَلَآءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமூஸா தன் சமுதாயத்திற்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவு கூருங்கள்: அவன் உங்களை ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து காப்பாற்றியபோது (உங்கள் மீது அருள்புரிந்தான்). அவர்களோ கடினமான வேதனையால் உங்களுக்கு சிரமம் தந்தார்கள், உங்கள் ஆண் பிள்ளைகளை அறுத்தார்கள், (கொலை செய்தார்கள்) உங்கள் பெண் (பிள்ளை)களை வாழவிட்டார்கள். இதில் உங்கள் இறைவனிடமிருந்து மகத்தான சோதனை இருந்தது.”
Tamil Translation - Omar Sharifமூஸா தன் சமுதாயத்திற்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “(என் மக்களே!) உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவு கூருங்கள், அவன் உங்களை ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து காப்பாற்றியபோது (உஙகள் மீது அருள்புரிந்தான்). அவர்களோ கடினமான தண்டனையால் உங்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுத்தார்கள். இன்னும், உங்கள் ஆண் பிள்ளைகளை அறுத்(து கொலை செய்)தார்கள். மேலும், உங்கள் பெண் (பிள்ளை)களை வாழவிட்டார்கள். இதில் உங்கள் இறைவனிடமிருந்து மகத்தான சோதனை (உங்களுக்கு) இருந்தது.”
Tamil Translation - Abdulhamid Baqawi6. மூஸா தன் மக்களை நோக்கிக் கூறிய சமயத்தில் ‘‘அல்லாஹ் உங்களுக்குப் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள்: அவன் உங்களை ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து காப்பாற்றினான். அவர்களோ உங்களுக்குக் கொடிய நோவினை செய்துகொண்டு வந்ததுடன், உங்கள் ஆண்பிள்ளையை வதை செய்து பெண் பிள்ளையை (மட்டும்) உயிருடன் வாழ விட்டுக் கொண்டுமிருந்தார்கள். இதில் உங்கள் இறைவனால் உங்களுக்குப் பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது'' (என்று கூறினார்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70