وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَآ أَنْ أَخْرِجْ قَوْمَكَ مِنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ وَذَكِّرْهُم بِأَيَّىٰمِ ٱللَّهِ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُورٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“உம் சமுதாயத்தை இருள்களில் இருந்து ஒளியின் பக்கம் வெளியேற்று; அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்களுக்கு ஞாபகமூட்டு” என்று திட்டமாக மூஸாவை நம் அத்தாட்சிகளைக் கொண்டு (அவரது மக்களிடம்) நாம் அனுப்பினோம். மிக பொறுமையாளர், மிக நன்றியறிபவர் எல்லோருக்கும் நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
Tamil Translation - Omar Sharifதிட்டவட்டமாக மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் (அவரது மக்களிடம்) நாம் அனுப்பினோம், (மூஸாவே!) “உம் சமுதாயத்தை இருள்களில் இருந்து ஒளியின் பக்கம் வெளியேற்றுவீராக! இன்னும், அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக! மிக பொறுமையாளர், மிக்க நன்றியறிபவர் எல்லோருக்கும் நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
Tamil Translation - Abdulhamid Baqawi5. நிச்சயமாக நாம் மூஸாவை நம் பல அத்தாட்சிகளுடன் அனுப்பிவைத்து “நீங்கள் உமது மக்களை இருள்களில் இருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருவீராக. அல்லாஹ்வி(ன் கட்டளையி)னால் ஏற்பட்ட பல சம்பவங்களை நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக'' (என்று அவருக்குக் கட்டளையிட்டோம்.) (கஷ்டங்களைச்) சகித்துப் பொறுமையுடன் இருப்பவர்கள், நன்றி செலுத்துபவர்கள் ஆகிய அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.