caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ibrahim அத்தியாயம், வசனம் 7

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 72 · 14:7

وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِى لَشَدِيدٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் நன்றி செலுத்தினால் (என் அருளை) உங்களுக்கு அதிகப்படுத்துவேன்; நீங்கள் நிராகரித்தால் நிச்சயமாக என் வேதனை கடுமையானதுதான் என்று உங்கள் இறைவன் அறிவித்த சமயத்தை நினைவு கூர்வீராக!
Tamil Translation - Omar Sharifமேலும், “நீங்கள் நன்றி செலுத்தினால் நிச்சயமாக (என் அருளை) உங்களுக்கு அதிகப்படுத்துவேன்; இன்னும், நீங்கள் நிராகரித்தால் நிச்சயமாக என் தண்டனை (உங்களுக்கு) கடுமையானதாக இருக்கும்” என்று உங்கள் இறைவன் அறிவித்த சமயத்தை நினைவு கூருங்கள்!
Tamil Translation - Abdulhamid Baqawi7. உங்கள் இறைவன் (உங்களை நோக்கி, ‘‘இதற்காக) நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் (நான் என் அருளை மேலும்) உங்களுக்கு அதிகப்படுத்துவேன். நீங்கள் (என் அருளுக்கு நன்றி செலுத்தாது) மாறுசெய்தால் நிச்சயமாக என் வேதனை மிகக் கொடியதாக இருக்கும் என்று அறிக்கையிட்டதையும் (நபியே!) நீர் (அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70