لِيَجْزِىَ ٱللَّهُ كُلَّ نَفْسٍ مَّا كَسَبَتْ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلْحِسَابِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒவ்வொரு ஆன்மாவுக்கும் அது செய்தவற்றின் கூலியை அல்லாஹ் கொடுப்பதற்காக (மறுமையை ஏற்படுத்தியுள்ளான்). நிச்சயமாக அல்லாஹ் விசாரிப்பதில் மிகத் தீவிரமானவன்.
Tamil Translation - Omar Sharifஒவ்வொரு ஆன்மாவுக்கும், - அது செய்தவற்றின் கூலியை அல்லாஹ் கொடுப்பதற்காகவே (மறுமை நாளை அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான்). நிச்சயமாக அல்லாஹ் (தனது அடியார்களை) விசாரி(த்து கூலி கொடு)ப்பதில் மிகத் தீவிரமானவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi51. ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்த செயலுக்குத் தக்க கூலியை அல்லாஹ் (இவ்வாறு) அளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிக்க தீவிரமானவன்.