caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ibrahim அத்தியாயம், வசனம் 52

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 72 · 14:52

هَٰذَا بَلَٰغٌ لِّلنَّاسِ وَلِيُنذَرُوا۟ بِهِۦ وَلِيَعْلَمُوٓا۟ أَنَّمَا هُوَ إِلَٰهٌ وَٰحِدٌ وَلِيَذَّكَّرَ أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇ(வ்வேதமான)து மக்களுக்கொரு எடுத்துச் சொல்லப்படும் செய்தியாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகவும்; அவன் ஒரே ஒருவன்தான் வணக்கத்திற்குரியவன் என்பதை அவர்கள் அறிவதற்காகவும்; அறிவுடையவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் (இவ்வேதத்தை தன் தூதருக்கு இறக்கினான்).
Tamil Translation - Omar Sharifஇ(வ்வேதமான)து, மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும் செய்தியாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகவும்; இன்னும், அவன்தான் வணக்கத்திற்குரிய ஒரே இறைவனாக இருக்கிறான் என்பதை அவர்கள் அறிவதற்காகவும்; இன்னும், நிறைவான அறிவுடையவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் (இவ்வேதத்தை தன் தூதருக்கு அவன் இறக்கினான்).
Tamil Translation - Abdulhamid Baqawi52. மனிதர்கள் இதைக்கொண்டு எச்சரிக்கப்பட்டு வணக்கத்திற்குரியவன் ஒரே ஓர் இறைவன்தான் என்று அவர்கள் உறுதியாக அறிந்து கொள்வதற்கும், அறிவுடையவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்கும் (குர்ஆனாகிய) இது (அல்லாஹ்வின் கட்டளைகள் உள்ளடங்கிய) ஓர் அறிக்கையாகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70