caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ibrahim அத்தியாயம், வசனம் 4

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 72 · 14:4

وَمَآ أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِۦ لِيُبَيِّنَ لَهُمْ فَيُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) எந்த ஒரு தூதரையும் அவருடைய மக்களின் மொழியைக் கொண்டே தவிர நாம் அனுப்பவில்லை. (காரணம்) அவர் அவர்களுக்கு (மார்க்கத்தை) தெளிவுபடுத்துவதற்காக ஆகும். ஆகவே, அல்லாஹ் தான் நாடுபவர்களை வழி கெடுக்கிறான். தான் நாடுபவர்களை நேர்வழி செலுத்து கிறான். அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) எந்த ஒரு தூதரையும் அவருடைய மக்களின் மொழியிலேயே தவிர நாம் அனுப்பவில்லை. நோக்கம், அவர் அவர்களுக்கு (மார்க்கத்தை) தெளிவுபடுத்த வேண்டும் என்பதாகும். ஆக, அல்லாஹ், தான் நாடுபவர்களை வழிகெடுக்கிறான். இன்னும், தான் நாடுபவர்களை நேர்வழி செலுத்துகிறான். மேலும், அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. (நபியே!) ஒவ்வொரு தூதரும் தன் மக்களுக்குத் தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அந்தந்த மக்களின் மொழியைக் கொண்டே (போதனை புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பிவைத்தோம். (அந்தத் தூதர்கள் எவ்வளவு முயற்சித்த போதிலும் அவர்கள் செய்யும் நன்மை தீமைக்குத் தக்கவாறு) அல்லாஹ் நாடியவர்களை தவறான வழியில் விட்டுவிடுகிறான். (நற்செயல்கள் செய்யும்) அவன் விரும்புகிறவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். அவன் அனைத்தையும் மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70